ரஷ்யாவில் வர்த்தகத் தடை அறிவிக்கும் நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல்? வணிகம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு - புதின்
பொருளாதார தடை என்ற பெயரில் ரஷ்யாவில் சேவைகளையும், வர்த்தகத்தையும் நிறுத்தும் சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்து, அவற்றை ரஷ்யாவுடன் வணிகம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வழங்க ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோல்ட் மேன் சாக்ஸ், ஜே.பி, மார்கன், வெஸ்டர்ன் யூனியன், மெக் டோனால்ட், பெப்சிகோ, அமேசான் உள்ளிட்ட 330-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளையும், வர்த்தகத்தையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் அவ்வாறு தடைகளை அறிவிக்கும் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments